பீகாரில் பிரபல ஆங்கில நாளிதழ் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

224

பீகாரில் சாசரம் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர சிங் என்பவர் இந்து தினசரி நாளிதழில் பத்திரிகை நிருபராக வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை தனது வீட்டின் அருகே இருந்த தேநீர் கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தர்மேந்திர சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது நெஞ்சு பகுதியில் குண்டு இறங்கியது. உடனடியாக தர்மேந்திர சிங்கை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக வாரணாசி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பாதி வழியிலேயே தர்மேந்திர சிங்கின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.