பீகாரில் இரயில் நிலையத்தை தீ வைத்து எரித்த நக்சல்கள் 5 ரயில்வே ஊழியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்!

458

பீகாரில் மசூதான் இரயில் நிலையத்தை தீ வைத்து எரித்த நக்சல்கள் 5 ரயில்வே ஊழியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
நேற்றிரவு பீகார் மசூதான் ரயில் நிலையம் நக்சல்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் கட்டுப்பாட்டு அறையை தீ வைத்து கொளுத்திய நக்சல்கள், உதவி ஊழியர் உட்பட ஐந்து ரயில்வே ஊழியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் 5 ரயில்வே ஊழியர்கள் கடத்தப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.