எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை!

334

பீகாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால் இறந்த மகளின் உடலை தந்தை தோளில் சுமந்து சென்ற காட்சி காண்பவர்களை கலங்க செய்தது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்,
உடல்நலம் குன்றிய நிலையில், சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல சிறுமியின் தந்தை மருத்துவமனை நிர்வாகத்தில் ஆம்புலன்ஸ் வசதி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஆம்புலன்ஸ் வழக்காததால் மகளின் உடலை தனது தோளிலேயே சுமந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்தார். இதைக்கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மனித நேயத்துடன், தனது ஆட்டோவில், அவரை அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சி காண்பவர்களை கலங்க செய்தது.