பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது மர்மநபர்கள் தாக்குதல்!

358

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், புக்சர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முதலமைச்சரின் இரண்டு பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், முதலமைச்சர் நிதிஷ்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.