பீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை!

361

பீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் கயாவில், அரசு நடத்தும் குருநானக் நடுநிலை பள்ளியில் 400க்கும் அதிகமான மாணவியர் மற்றும் 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லாததால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் மாணவ மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிப்பறை இல்லாதது பற்றி கயா மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசு அதிகாரிகள் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கைகும் எடுக்க வில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.