ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுமி : மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிம்

359

பீகாரில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முங்கர் நகரில் 225 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி 48 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுமிக்கு தேவையான ஆக்‌ஷிஜன் டியூப் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.