ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த மகன் : மகனின் சடலத்தை தோளில் சுமந்த தந்தை

684

பீகாரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் காயம் அடைந்த தனது மகன் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டிய தந்தை, சடலத்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாலந்தாவில் நேற்று 11 வயது சிறுவன் விபத்தில் காயமடைந்தார். ஆம்புலன்சை அழைத்து நீண்ட நேரமாகியும் வரவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து தாமதமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இறந்ததைக் கண்டு அவரது தந்தை கதறி அழுதார். மகனின் சடலத்தை எடுத்துச் செல்லவும் வாகனம் தர மறுத்ததாகக் கூறி, அவர் தமது தோளிலேயே சுமந்து சென்றார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், சிறுவனின் சடலத்தை வீடு சேர்க்க இருசக்கர வாகனத்தின் மூலம் உதவினர்.