ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 3 வயது சிறுமி பத்திரமாக மீட்பு…

381

பீகாரில் உள்ள ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 3 வயது சிறுமி 31 மணிநேர தொடர் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்…

முங்கர் நகரில் 225 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சானா என்ற 3 வயது சிறுமி அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி 48 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணியை மேற்கொண்டனர். சிறுமிக்கு தேவையான ஆக்‌ஷிஜன் டியூப் மூலம் வழங்கப்பட்டது. 31 மணிநேர தொடர் போராட்டத்திற்கு பிறகு சிறுமி சானா பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது தயார் நிலையிலிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவகள் சிறுமி சானா நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.