பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்! -மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்

444

தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை மக்கள் விரும்புவதாக மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தங்கத்தேர் அமைப்பதற்காக பக்தர்களிடம் நன்கொடை பெறுவதற்காக சென்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய போது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரான பிக் பாஸ் நிகழ்ச்சியை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுத்த வேண்டும் என கூறினார். ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதை ஓபிஎஸ் மறுப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, யார் யாருக்கு இடையே தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தவேண்டும் என்று பொன். ராதா கிருஷ்ணன் பதிலளித்தார். இணையம் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் தொடர்பாக மீனவ மக்களுடன் விவாதிக்க தயார் எனவும் இத்திட்டத்தின் பெயரால் பொதுமக்களை எவரும் குழப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.