காஷ்மீர் மக்களை துப்பாக்கிகளின்றி அச்சமில்லாமல் விரைவில் சந்திப்போம் – ராணுவ தளபதி பிபின் ராவத்

197

காஷ்மீர் மக்களை துப்பாக்கிகளின்றி அச்சமில்லாமல் விரைவில் சந்திப்போம் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து விவரிக்க ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 1970,1980 கால கட்டங்களில் ஜம்மு – காஷ்மீர் மக்களை ராணுவ வீரர்கள் சகஜமாக சந்தித்ததாகவும், தீவிரவாதம் குறித்த எவ்வித அச்சமும் அந்த தருணங்களில் எவருக்கும் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் தற்போது சட்டப்பிரிவு 370 திரும்ப பெறப்பட்டுள் ளதையடுத்து அமைதியான சூழல் திரும்ப தொடங்கியுள்ளது என்றும் விரைவில் கையில் துப்பாக்கி ஏந்தாமல், பாதுகாப்பு குறித்த பயம் இன்றியே மக்களை சந்திப்போம் என நம்புவதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.