ஓரினச்சேர்க்கையை நடைமுறைப்படுத்த முடியாது – இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்

81

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் அது ராணுவத்தில் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள் ராணுவ வீரர்களுக்கு பொருந்தாது என குறிப்பிட்டார். ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் அது ராணுவத்தில் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும் பிபின் ராவத் கூறினார். மேலும், ராணுவத்தில் ஓரினச் சேர்க்கை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.