காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்ம்

258

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் ஜெயகணேஷ் தலைமையில் காங்கிரஸார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.