பீகாரில் சிறுமியை கூட்டாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி வந்த புகாரில், தனியார் பள்ளியின் முதல்வரும், ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரின் சப்ரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 9ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம், வகுப்பில் உடன்படித்து வந்த மாணவன் ஒருவனால் தாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் வேறு சில மாணவர்களும் மிரட்டி, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக சிறுமி புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த அப்பள்ளியின் முதல்வரும், இரு ஆசிரியர்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். சிறை சென்ற சிறுமியின் தந்தை திரும்பி வந்து, புகார் அளித்ததை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஒரு ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர். மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ​