தனது நீண்ட நாள் காதலரான தயாரிப்பாளர் நவீனை, நடிகை பாவனா இன்று கரம்பிடித்தார்.

718

தனது நீண்ட நாள் காதலரான தயாரிப்பாளர் நவீனை, நடிகை பாவனா இன்று கரம்பிடித்தார்.
பிரபல நடிகை பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நடிகை மஞ்சு வாரியர் உள்பட 16 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் நவீன் மற்றும் பாவனா சில காரணங்களால் திருமணத்தை தள்ளிப் போட வேண்டியிருந்தது. இந்நிலையில் கேரளாவின் திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் நடிகை பாவனா, நவீன் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது.