நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து எர்ணாகுளத்தில் மலையாள திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

402

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து எர்ணாகுளத்தில் மலையாள திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலையாள நடிகையான பாவனா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திரைப்பட சூட்டிங்கிற்காக திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை மடக்கிய மர்மநபர்கள் பாவானாவை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாவனா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கார் ஓட்டுநர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, பாவனாவுக்கு ஏற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று எர்ணாகுளத்தில் மம்முட்டி, திலீப், ஜெயசூர்யா, மஞ்சு வாரியார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.