கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேமில் மிக பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைப்பு!

527

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் ஆலயத்தில் பெரிய கிறிஸ்துமஸ் மரம் வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஏசு பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள ஆலயத்தில் மிக பெரிய கிறுஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரத்தின் அறிமுக நிகழ்ச்சியில், வெடிக்கப்பட்ட வாண வெடிக்கைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இதனை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சகணக்கான கிறிஸ்தவர்கள் பெத்லகேமில் கூடியிருந்தனர்.