பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதா திருத்தலத்தின் ஆண்டுத்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் தெரிவித்துள்ளார்.

249

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதா திருத்தலத்தின் ஆண்டுத்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பேராலயத்தின் பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதா திருத்தலத்தின் 44ஆம் ஆண்டுத்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். 29ம் தேதி தொடங்கும் இந்த விழா வரும் செப்டம்பர் 8ம் தேதியுடன் நிறைவுபெறுவதாக கூறிய அவர், 11 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் திருப்பலியும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளுக்கு அரசு தரப்பிலிருந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்படவுள்ளதையொட்டி அவரது திருவுருவச்சிலை நிறுவப்படவுள்ளதாகவும் பிரான்சிஸ் சேவியர் தெரிவித்தார்.