அதிமுக தலைமைகத்தில் பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பை ஒட்டிய டிடிவி ஆதரவாளர்கள்..!

705

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒட்டினர்.
சென்னையில் தொடங்கியுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த பெங்களுரு நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதியளித்தது. இந்த நிலையில், பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒட்டியுள்ளனர். இது அதிமுக-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.