பெங்களுரில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

236

பெங்களுரில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களுருவில் உள்ள பெல்லாந்தூரில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். தரைதளத்தில் கட்டிட வேலைபாடுகளில் ஈடுபட்டு வந்த கூலி தொழிலாளர்கள் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.