உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்து அம்மாநில ஆளுநர் அலுவலகத்திற்குள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 9 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்திய கெஜ்ரிவால், ஆளுநரின் அறிவுறுத்தலின்படி கடந்த 19 ஆம் தேதி போராட்டத்தை கைவிட்டார். போராட்டத்தின்போது சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால் கெஜ்ரிவாலின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரு மருத்துவமனைக்கு வந்தடைந்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.