பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் இன்று சரண் அடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

301

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் இன்று சரண் அடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. மேலும், சசிகலா உட்பட மூன்று பேரும் பெங்களுரு நீதிமன்றத்தில் உடனே சரண் அடையவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, குற்றவாளிகள் ஆஜராவதற்கு வசதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இந்த தனி நீதிமன்ற அறையில் வைத்துதான் சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி குன்ஹா விசாரித்து வந்தார். இந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 48வது நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா உட்பட மூன்று பேரும் இன்று சரண் அடைய உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றம் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.