பேக்கரி தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள்..!

189

கோவையில் நடைபெற்று வரும் பேக்கரி தொழில்நுட்ப கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் பேக்கரி தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நாளை வரை நடைபெறும் கண்காட்சியில் பேக்கரி இயந்திரங்களின் தயாரிப்பு முறைகள், பராமரிப்பு எந்திர பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட சிறு குறு பேக்கரி உரிமையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். சுமார் 8 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.