கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சரை பதம் பார்த்தம் தேனிக்கள் !

1091

கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அம்மாநில அமைச்சரை தேனிக்கள் ஓட கடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் பயோபார்க் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அம்மாநில அமைச்சர் ரமாநாத் ராய் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, மேடையை நோக்கி படையெடுத்து வந்த தேனிக்கள் மேடையில் இருந்தவர்களையும், பார்வையாளர்களையும் விரட்டி விரட்டி தாக்கின. இதனால் அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். தேனீக்களின் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ரமாநாத் ராயும், அரசு அதிகாரிகளும் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனால், பயோபார்க் திறப்பு விழா நின்றது. தேனீக்களால் விழா தடைப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.