மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

304

மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, பின்னர் சரண் அடைந்தார். இதையடுத்து 50 நாட்கள் புழல் சிறையில் இருந்த அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ நேரில் ஆஜராகினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரளம், மேற்கு வங்கத்தை போன்று தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.