மாட்டிறைச்சி ஏற்றுமதி – இந்தியா 3ஆம் இடம்

231

உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளதாக உணவு வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் டன் மாட்டு இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகளவில் அதிகம் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரேசில், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 2026ம் ஆண்டில் இந்தியா 16 சதவீத பங்களிப்பை அளிக்கும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு,
கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரம் டன் மாட்டு இறைச்சியை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.