மதத்தோடு ஒப்பிட்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.,..

250

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பதை மதத்தோடு ஒப்பிட்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் உற்ற தோழனாய் வி்ளங்கும் பசுவை, விவசாயிகள் பராமரிக்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையை தடுக்கவே மத்திய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக விளக்கம் அளித்தார். இதை ஒரு மதத்தோடு தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.