மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

229

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதேபோன்று, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.