சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ.20 கோடி !

100

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 22 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 11 சீசன் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து 12வது சீசனுக்கான முதல் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு முறையும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கலைஞர்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக 20 கோடி ரூபாய் செலவிடப்படும். ஆனால், இம்முறை இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கு செலவாகும் 20 கோடி ரூபாயை சமீபத்தில் புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி கிரிக்கெட் தொடக்குவதற்கு முன்பு 20 கோடி ரூபாயை ராணுவ அதிகாரிகளிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பிலும் 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.