பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர், செயலாளரின் அலுவலகத்திற்கு புதிய நிர்வாகிகள் குழு பூட்டு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

365

பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர், செயலாளரின் அலுவலகத்திற்கு புதிய நிர்வாகிகள் குழு பூட்டு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தாததால் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த அனுராக் தாக்கூரையும், செயலாளராக இருந்த அஜய் ஷிர்கேவையும் பதவிநீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான 4 பேர் அடங்கிய புதிய நிர்வாக குழுவை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், அனுராக் தாக்கூரால் நியமிக்கப்பட்ட ஊடக மேலாளர் நிஷாந்த் அரோராவை பதவிநீக்கம் செய்து புதிய நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலர்கள் சிலரையும் பதவிநீக்கம் செய்தது. அதுமட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரின் அலுவலகங்களுக்கு புதிய நிர்வாக குழு பூட்டு போட்டுள்ளது.