இந்தியா – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான டெஸ்ட் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம்..!

498

இந்தியா – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் மழை காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய ஏ மற்றும் பி அணிகள், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. விசாகப்பட்டனத்தில், செப்டம்பர் 2 முதல் 11ம் தேதி வரை இரண்டு போட்டிகளிலும் நடைபெற இருந்தது. இந்நிலையில், போட்டி நடைபெறும் தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு போட்டிகளையும் பிசிசிஐ பெங்களூருவிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.