வங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை!

504

மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.