நவீன தொழில்நுட்பத்துடன் ரீ மாடல் செய்யப்பட்டுள்ள பாட்ஷா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

230

நவீன தொழில்நுட்பத்துடன் ரீ மாடல் செய்யப்பட்டுள்ள பாட்ஷா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

சத்யா மூவிஸ் நிறுவனத்தின் வெற்றிப்படங்களில் ஒன்று பாட்ஷா. திரையிடப்பட்ட நாள் முதல், தற்போது வரை திரையிடப்படும் அரங்குகளில் மக்கள் ஆவலுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். இதுவரை மறக்க முடியாத வெற்றிப்படமாக இருந்து வரும் பாட்ஷா திரைப்படத்தை, சத்யா மூவிஸ் நிறுவனம் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் ரீ மாடல் செய்துள்ளது. இதனுடைய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சத்யா மூவிஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு துவக்க விழாவையொட்டி , பாட்ஷா ரீ மாடல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் திரைக்கு வரும் பாட்ஷா, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.