இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நீச்சல் பழகும் பென்குயின் குஞ்சுகள்!

423

பர்மிங்காமில் பென்குயின் குஞ்சுகள் நீச்சல் பழகுவதற்காக பிரத்யேக நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தேசிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் மையம் அமைந்துள்ளது. இங்கு பென்குயின் குஞ்சுகளுக்கான பிரத்யேக நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பென்குயின்களை கவரும் வகையில், பொம்மைகள், பந்துகள், மீன் பொம்மைகள் போன்றவை போடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள இரு பென்குயின் குஞ்சுகள் ஆர்வமுடன் நீச்சல் பழகுகின்றன. அவை நீச்சல் பழகும் வீடியோவை அந்த மையம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பென்குயின்கள் நீச்சல் பழகும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.