உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் தகவல்..!

174

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 நீதிபதிகள் இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதால், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என இந்திய பார் கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து பார்கவுன்சில் சமரசக்குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நீதிபதிகள் கருத்து வேறுபாடுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதால் , அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என பார் கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து முடிவெடுக்கும்படி அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பார்கவுன்சில் தலைவர் மனன் மிஸ்ராவிற்கு எழுதிய கடிதத்தில், பார் கவுன்சிலின் தேர்தல் நடவடிக்கையில் இருந்து விலகி கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.