மாவட்ட தலைநகரங்களில் ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக, ஆளுநர் பன்வாரிலால் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆளுநர் ஆய்வு குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2வது முறையாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, மகாராஷ்டிரா சட்ட வல்லுநரின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது.

ஆளுநருக்கு மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதல்வரின் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கிறது என்றும்,மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை எனவும், இது தமிழக அரசுக்கு எதிரான ஆய்வு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.