சிவகங்கை பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார் – ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்

83

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சிவகங்கை பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிவகங்கை மாவட்டத்துக்கு சென்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு குப்பைகளை அகற்றினார். பின்னர் அவர் பள்ளி மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம், ஹோட்டல், தனியார் நிறுவனங்களுக்குச் சென்று தூய்மை நகரமாக மாற்ற அறிவுறுத்தினார்.

அதன்பின்னர் வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் ஆளுநர் மனுக்களைப் பெற்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத்தினர் பேருந்துநிலையத்தின் கழிப்பறைகளையும் அதைச்சுற்றியுள்ளப் பகுதிகளையும் தூய்மை செய்தனர்.