இ-சிகரெட் விற்பனைக்கு தடை : மத்திய சுகாதாரத்துறை அதிரடி

224

புற்றுநோயை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இருப்பதால் இ-சிகரெட் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு சந்தைக்கு வந்த இ-சிகரெட் 182 நாடுகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட ஒரே ஆண்டில் 80 கோடி டாலருக்கு விற்பனை நடைபெற்றதாக அமெரிக்க சிகரெட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதேபோல் இந்தியாவிலும் இந்த இ-சிகரெட்டிற்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனிடையே இ-சிகரெட்டால் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் நிகோடின் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து இந்தியாவில் இ-சிகரெட் விற்பனைக்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.