ஊதிய உயர்வு கோரி, 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

133

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, நாளை முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம், வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்தது. இதையடுத்து, நவம்பர் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், வங்கி நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, வாராக் கடனை காரணமாக வைத்து, வெறும் 2 சதவீதம் மட்டும் ஊதிய உயர்வு வழங்க வங்கி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளன. ஆனால், இது தங்களுக்கு போதாது என்று கூறி வங்கி ஊழியர்கள் சங்கம் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையே, இந்த வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் என்று இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.