மத்திய அரசு உத்தரவுப்படி வங்கிகள் முறையாக பணம் விநியோக்கிக்க வில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

73

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அமைந்துள்ளது. பணிக்கு வந்த ஊழியர்கள் பொதுமக்களுக்கு பணம் வழங்காமல் உள்பக்கம் பூட்டியப்படி பணி செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் மூலச்சத்திரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இங்கு மத்திய அரசின் உத்தரவுபடி முறையாக பணம் வழங்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.