பொதுத்துறை வங்கி எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டன.

251

பொதுத்துறை வங்கி எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டன.
பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்துத்தேர்வு இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அலுவலகத்தில் இதற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் நடைபெறுகின்றன. 18 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டதாகவும், திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.