வங்கி அதிகாரிபோல நடித்து, ஏடிஎம் விபரங்களை பெற்று பணமோசடி செய்த புதுடெல்லியை சேர்ந்த 4பேர் கைது !

307

வங்கி அதிகாரிபோல நடித்து, ஏடிஎம் விபரங்களை பெற்று பணமோசடி செய்த புதுடெல்லியை சேர்ந்த 4பேர் திருச்சியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏடிஎம் விபரங்களை தெரிந்து கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடியது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டெல்லி சென்ற போலீசார் வடிவேல் சித்தேஷ்குமார், கணேஷ், அருண்முருகன் ஆகிய 4பேரை கைது செய்தனர். திருச்சி கொண்டுவரப்பட்ட இவர்கள், காவல்துறை விசாரணைக்கு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.