பெங்களூருவில் கொட்டித் தீர்த்தக் கன மழைக் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

441

பெங்களூருவில் கொட்டித் தீர்த்தக் கன மழைக் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கன மழைக் கொட்டித் தீர்த்தது. பெங்களூருவின் தெற்குப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தது. சூறைக் காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. கன மழைக் காரணமாக பல இடங்களிலுள்ள வீடுகள் வெள்ளம் சூழ்ந்துக் காணப்படுகிறது. அங்குள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள பள்ளிகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழைக் காரணமாக சாலைகளில் மழை நீர்த் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.