பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா….

514

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, 2வது முறையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சலுகைகள் வழங்க 2 கோடி ரூபாய் கைமாறியதாக, சிறைத் துறை, டி.ஜி.பி., மீது குற்றஞ்சாட்டி, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட அறிக்கை, பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி., ரூபா மீண்டும் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
சசிகலாவை சந்திக்க வந்தவர்கள் குறித்து சிறையில் இருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் மற்றும் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கர்நாடக மாநில உள்துறை முதன்மை செயலாளர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு ரூபா அனுப்பியுள்ள இரண்டாவது அறிக்கையில்,இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது