பெங்களூரு அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்!

314

பெங்களூரு அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே எஜிபுரா குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த பகுதியில் உள்ள வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக
எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால், அந்த பகுதியில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் வீட்டில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, தவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.