டாக்கா தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாகிதீன் தலைவர் உள்பட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

229

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் கடந்த 1ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு அதிரடி படையினர் தக்க பதிலடி கொடுத்த நிலையில், இந்திய பெண் உள்பட 22 பேரும், தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை அதிரடி படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் காஜிப்பூர் மாவட்டத்தின் டோங்கி நகரில், வீடு ஒன்றில் பதுங்கி இருந்த ஜமாத்துல் முஜாகிதீன் அமைப்பின் தெற்கு பிராந்தியத்திற்கான தலைவர் மகமதுல் ஹாசன் தன்வீர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.