வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் மில்லர் 35 பந்துகளில் சதமடித்து சாதனை..!

399

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் மில்லர் 35 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் 5வது வீரர்ராக களமிறங்கிய மில்லர், முதலில் 23 பந்துகளில் அரை சதம் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் முகமது சைஃபுதின் வீசிய 19வது ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் மில்லர் சிக்ஸர் அடித்து அசத்தினார். சிக்ஸர் மழை பொழிந்த மில்லர் 35 பந்துகளில்101 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு மற்றொரு தென்ஆப்பிரிக்க வீரர் லெவி 45 பந்துகளில் சதமெடுத்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.