வங்கதேச அதிபராக அப்துல் ஹமீது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!

1260

வங்கதேச அதிபராக அப்துல் ஹமீது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அதிபராக பதவி வகித்து வந்த அப்துல் ஹமீதுவின் பதவி காலம் நிறைவு பெறுவதையொட்டி பிப்ரவரி 18-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், வங்கதேச ஆளும் அவாமிக் லீக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் அக்கட்சி தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்றது.
இதில் அப்துல் ஹமீதுவை மீண்டும் அதிபராக்க முடிவு செய்யப்பட்டது. இதனிடையே வேட்புமனு தாக்கலின் போது, அப்துல் ஹமீதுவை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து ஹமீது மீண்டும் வங்கதேச அதிபராக போட்டியின்றி தேர்வு பெற்றதாவும், ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.