சொத்து தகராறு – தந்தையின் கண்ணை பிடுங்கிய மகன்

363

பெங்களூரு அருகே சொத்து தகராறில் தந்தையின் கண்ணை பிடுங்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த 66 வயதான பரமேஷ் என்பவரிடம், தன்னுடைய சொத்தை பிரித்து தருமாறு அவரது மகன் கேட்டுள்ளார். இதற்கு பரமேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையின் கண்ணை கரங்களினால் பிடுங்கியுள்ளான். அருகில் இருந்தவர்கள் வலியால் துடித்த பரமேஷை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தந்தையை தாக்கிய மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தாய் இறந்துள்ள நிலையில், சொத்து கேட்டு தந்தையின் கண்ணை மகன் பிடுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.