பெங்களூருவில் ஏடிஎம் மையத்துக்கு நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் வேனோடு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

187

பெங்களூரு கே.ஜி.சாலையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளையிலிருந்து ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக வேன் ஒன்று புறப்பட்டது. ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுக்களுடன் சென்ற இந்த வேனுடன் காவல்துறையினரும் பாதுகாப்புக்கு சென்றனர். கெம்பே கவுடா பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் அருகே வேன் சென்றபோது, காவல்துறையினர் வேனிலிருந்து இறங்கி வெளியே சென்றனர். அப்போது, தம்முடன் பணத்தை கொண்டு வந்த தனியார் நிறுவன ஊழியருடன் சேர்ந்து டிரைவர் வேனை கடத்திச்சென்றுவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பெங்களுரூ முழுவதும் சீல் வைக்கப்பட்டு கடத்தப்பட்ட வேனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் பணத்துடன் வேன் கடத்தப்பட்ட சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.