21 குட்டிகளை ஈன்ற பிட்புல் வகை நாய்..!

265

பெங்களூருவில் பிட் புல் வகை நாய் ஒன்று 21 குட்டிகளை ஈன்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு குட்டிகள் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 17 நாய்க்குட்டிகளை தாய் நாய் அரவணைத்து வருகிறது. தற்போது, 17 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. இந்த நாய் குட்டிகளை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். தாய் நாய் குட்டிகளை யார் தொட்டாலும் குரைப்பதில்லை என்று நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.